2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய யுகத்துக்கு ஜனாதிபதி வித்திட்டுள்ளார்

Sudharshini   / 2015 ஜனவரி 15 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய யுகத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்திட்டுள்ளார் என சர்வதேச வை.எம்.எம்.ஏ அசெம்பிளியின் தலைவர் எம்.அஸ்ரப் ஹுஸைன் வியாழக்கிழமை (15) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பல்லின மக்களின் ஆதரவுக்கு மத்தியில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டது மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

குறிப்பாக சிறுபான்மை சமுக மக்களின் எதிர்பார்ப்புக்கள் இத்தேர்தலில் அதிகம் காணப்பட்டது. அவர்களின் எதிர்பார்ப்புக்களை புதிய ஜனாதிபதி நிறைவேற்றி, நல்லாட்சியை தோற்றுவிப்பார் என்ற நம்பிக்கை சர்வதேச வை.எம்.எம்.ஏ அசெம்பிளிக்கு உண்டு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச வை.எம்.எம்.ஏ அசெம்பிளி சார்பாக, அவரின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலுக்கு முன் சர்வதேச வை.எம்.எம்.ஏ அசெம்பிளி நாடு முழுவதும் மேற்கொண்ட களநிலவரங்களின் போது, புதிய ஜனாதிபதியின் அமோக வெற்றி அறியக்கூடியதாக இருந்தது. புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X