2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பட்டிப்பொங்கலை தெரியாதோர் உள்ளனர்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 16 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

தற்போதைய காலகட்டத்தில் பட்டிப்பொங்கல் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் அதிகளவானோர் உள்ளார்கள். அந்த வகையில், கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்துள்ள பட்டிப்பொங்கல் வரவேற்கத்தக்கது என்று மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த பட்டிப்பொங்கல் இன்று வெள்ளிக்கிழமை (16) குருக்கள்மடம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,  

'பண்டைய காலத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்ற பட்டிப்பொங்கல், இடைப்பட்ட மற்றும் அண்மைய காலங்களில் அருகிப் போயுள்ளது.

தற்போது பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழகங்கள்வரையான பாடத்திட்டத்திலும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ள பாடவிதானமாக பட்டிப்பொங்கல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் ஏனைய இன மக்களும் பட்டிப்பொங்கலை கொண்டாடியுள்ளதாக பல புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளன.
இந்துக்களின் முழுமுதல் கடவுளான சிவபெருமானின் வாகனம் நந்தி. இதனால், நந்திக்கொடியை இந்துக்கள் தமது சின்னமாக பயன்படுத்துகின்றார்கள். நந்திக்கொடியின் முழு தத்துவமும் பலருக்கு தெரியாதுள்ளன.   

ஆரம்ப காலத்திலிருந்த மன்னர்கள் பலர் நந்தியை வணங்கிவிட்டே ஏனைய தெய்வங்களை வணங்கியிருக்கின்றார்கள். ஆரம்ப காலத்தில் நந்திவர்மன் என்ற பெயருடைய மன்னன் ஒருவன்  இருந்துள்ளான். பல்லவர்காலம், சோழர்காலம் போன்ற கால கட்டங்களில் நந்திக்கொடி பெயர் பெற்றிருந்தது. இராஜராஜசோழ மன்னன், போரில் வென்ற  பின்னர் நந்திக்கொடியை ஏற்றி, தனது போர் வெற்றியை கொண்டாடியதாக புராணக்கதைகள் கூறுகின்றன. நந்தி புனிதமானது. கோமாதா எங்கள் குல மாதாவாகும். இந்துக்களின் குல மரபையும் சக்தியையும் பேணுவது கோமாதாவாகும்' என்றார்;.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X