2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வரட்சிப் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நஷ்டஈடு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 16 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கமநலசேவைப் பிரிவில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு பெரும்போகத்தின்போது, வரட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட 98 விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 2,800 ரூபாய் படி நஷ்டஈட்டுக் காசோலைகளை  இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வாழைச்சேனை கமநலசேவைப் பிரிவில் பாலக்காடு, முல்லிவட்டவான், மதுரங்கேணி, காரையடிப்பட்டடி, அக்குரானை ஆகிய ஐந்து விவசாயக்கண்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 386 ஏக்கர் வயல்நிலக்களுக்குரிய விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.
98 விவசாயிகளுக்கும் மொத்தமாக 10 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலய கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.றஷீட், கோறளைப்பற்று பிரதேச செயலக நிதி உதவியாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X