2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்று வெள்ளிக்கிழமை(16) வழங்கப்பட்டன.

விற்பனை செய்யப்பட்ட அதிர்ஷ்ட இலாபச் சீட்டிலிருந்து 1ஆம், 2ஆம் , 3ஆம் பரிசுக்குரிய அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் மூன்று பரிசை பெற்றுக் கொண்டவர்கள் முறையே முதலாம் பரிசு: டி.கரிகரன், கண்ணகிபுரம், வாழைச்சேனை. இரண்டாம் பரிசு, எஸ்.நிதர்சினி, காளிகோயில் வீதி, ஆறுமுகத்தான் குடியிருப்பு   மூன்றாம் பரிசு: எம்.புவனேஸ்வரி, கண்டலடி, வாகரை. ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி அதிர்ஷ்டசாலிகளுக்கான பரிசில்கள், செயலாளர் சி.இந்திரகுமார், மற்றும் நலன்புரிச்சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X