2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானைகள் தாக்கி இரண்டு வீடுகள் சேதம்

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் யானைகள் தாக்கியதில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை நள்ளிரவு காந்திகிராமம் பிரதேசத்துக்குள் நுழைந்த யானைகள் இரண்டு வீடுகளை உடைத்துள்ளதுடன், வயல் நிலங்கைளையும் சேதப்படுத்தியுள்ளன. அத்துடன் மின்சார விநியோகக் கம்பம் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளன.

இரவு வேளையில் வந்த யானைகளின் சத்தம் கேட்டு வெளியில் வந்து வெடிகளைப் போட்டும் வெளிச்சங்களைக் காண்பித்தும் விரட்டியதாகவும் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்துக்குப்பின்னரான காலப்பகுதியில் இருந்து இந்த யானைகளின் வருகை அதிகமாக இருப்பதாகவும், வனவிலங்கு பாதுகாப்புப்பிரிவினர் இந்த யானைகளை யானைப் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டுள்ள வேலிகளுக்கு மறுபக்கம் கொண்டு சென்று விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X