2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தைத்திருநாளையொட்டி பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  


தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக மட்டக்ளப்பு - கடுக்காமுனை விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்  கடுக்காமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று(16) வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

விளையாட்டுக்கழக தலைவர் த.கந்தப்போடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கடுக்காமுனை வாணி வித்தியாலய அதிபர்எஸ். தேவராஜன், ஆசிரியர் மா.ஜீவரெத்தினம், கிராமசேவை உத்தியோகத்தர் சி.ஜீவிதன் மற்றும் கடுக்காமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர்  கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பாரம்பரிய விளையாட்டுக்களான, வழுக்குமரம் ஏறுதல், தலையணைசமர், மெதுவான சைக்கிள் ஓட்டம், சாக்கோட்டம், ஊசி நூல் கொர்தல் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

நிகழ்வுகளில் கலந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.




 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X