2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றிய பெருமை தமிழர்களுக்கே : அரியநேந்திரன்

Sudharshini   / 2015 ஜனவரி 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் பதவிகளுக்கோ சலுகைகளுக்கோ சோரம் போகாமல், நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆட்சிமாற்றத்துக்காக வாக்களித்து மஹிந்தவின் அரசாங்கத்தை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றிய பெருமை தமிழர்களுக்கே அதிகம் உண்டு.


மில்கோ நிறுவனமும் கால்நடை வளர்போரும் இணைந்து நடாத்திய பட்டிப் பொங்கல் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (16) வெல்லாவெளியில் மில்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் கே.கனகராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிபீடம் ஏறுவதுக்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவை என்பதை நடைபெற்று முடிந்த தேர்தல் நிரூபித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

 இந்த உண்மையினை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உணர்ந்து மனம் விட்டு கூறியிருக்கின்றார்.

 நன்றி தெரிவிக்கும் பாரம்பரியம் தமிழ் மக்களால் பேணப்பட்டு வருகிறது. வயல்களிலே நெல்மணியினை எடுக்கும் உழவர்களுக்கும் அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவே தைப்பொங்கல் விளங்குகின்றது. பட்டிப்பொங்கல் என்பது உழவர்கள் செல்வமாக மதிக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். இந்த நன்றி செலுத்துதலை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பேணவேண்டும்.

சிலர் அரசியலுக்காக நன்றிசெலுத்த வேண்டும் என கடந்த தேர்தலில் கூறியிருந்தனர். அரசியலுக்காக எவரும் நன்றிசெலுத்தத் தேவையில்லை. அரசியலுக்கு நன்றி செலுத்துவது எதுவென்றால், வரவேற்று  மாலை போட்டால் அவர்களுக்கான நன்றி முடிந்துவிட்டது. அதனை விடுத்து தமிழர்கள் வாக்களிப்பதுதான் நன்றி எனக்கூறி மக்களை குழப்பினார்கள். அதற்கும் மக்கள் ஏமாறவில்லை.

குறிப்பா நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலையில் போட்டியிட்ட மஹிந்தவின் அடியாட்களும் அமைப்பாளர்களும் பிரதியமைச்சர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சம் மதுபானப்போத்தல்களை விநியோகித்தனர்.

மேலும், மாவட்டத்தில் 94 தேர்தல் காரியாலயங்களைத் திறந்து வைத்தனர்.அத்துடன், இலட்சக்கணக்கில் மஹிந்தவின் சுவரொட்டிகளை வெளியிட்டதோடு 10 ஆயிரம் நீல ரீசேட்டுக்களையும் பணத்தையும் வழங்கினர். ஆனால், இவற்றையெல்லாம் வழங்கினாலும் மஹிந்தவின் அரசாங்கத்தால் வெல்லமுடியவில்லை.

 பல அட்டகாசங்களுக்கும் மத்தியில் வடகிழக்கு மக்கள் தமிழ்க்கூட்டமைப்பின் கதைக்குப் பின்னால் நின்று, தனது கொள்கையில் இருந்து மாறாது வாக்களித்து மஹிந்தவை தோற்கடித்து மைத்திரியை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளனர்.

அதற்காகத்தான் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரிடம் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்குமாறு அரசாங்கம் கூறியது. அதனை நாம் ஏற்கவில்லை. பல புத்திஜீவிகள் அமைச்சுப்பதவியை பெற்று இருக்கவேண்டும் என்றனர். ஆனால், எமது நோக்கம் அமைச்சுப்பதவிகளை பெறுவதல்ல.

நாங்கள் 65 வருடகாலமாக இழந்த உரிமையினை மீட்டெடுக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் பூரண சுதந்திரத்தினை வடகிழக்கு தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் செய்து வருகிறோம்.

இந்த அபிலாஷைகளுக்காகத்தான் எமது மக்களை எமது கொள்கைக்குப் பின்னால், நிற்குமாறு பலதடைவை கூறியிருக்கிறோம். அவர்களும் எங்கள் பின்னால் நின்று பல வெற்றிக்கு கைகொடுத்து வருகிறார்கள்.

புதிதாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 10 நாட்கள் கடந்து விட்டது. இன்னும் 90 நாட்கள் இருக்கிறது. இக்காலத்தில் அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற இருக்கிறது.

இந்த 100 நாட்களின் பிற்பாடு ஏப்ரல்; 23ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பலப்படுத்துவதன் மூலம் தான் எங்களது எதிர்கால நகர்வுகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா ஞா.கிருஸ்ணப்பிள்ளை உட்பட பலர் கலந்;துகொண்டர்
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X