2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிரான்குளம் விபத்தில் முதியவர் பலி

Kanagaraj   / 2015 ஜனவரி 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரதேசத்தில் இன்று(17.1.2015) சனிக்கிழமை மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தலிருந்து டிப்பர் லொறியொன்று களுவாஞ்சிகுடி நோக்கி சென்று கொண்டிருந்த போது கிரான்குளம் பிரதேசத்தின் பிரதான வீதியில் வீதியோரமாக நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த மேற்படி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த சாமதித்தம்பி தங்கத்துரை(84) என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X