2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளை இணைத்துகொள்ள நடவடிக்கை

Kogilavani   / 2015 ஜனவரி 18 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

வேலையற்ற பட்டதாரிகளை இணைத்துகொள்வதற்கான நடவடிக்கைகளை வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளதாக அதன் உபதலைவர் எம்.மதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2012, 2013, 2014 காலப்பகுதியில் பட்டதாரி சான்றிதழ்களைப் பெற்றுகொண்டு இதுவரை வேலைவாய்ப்பு அற்றிருக்கும் பட்டதாரிகளே இவ்வாறு இணைத்துகொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாங்காடு சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள பல்தேவைக் கட்டடத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(2) காலை 10 மணியளவில் நடைபெற இருக்கும் நிகழ்வின்போது அங்கத்தவர்கள் இணைத்துகொள்ளப்படவுள்ளனர்.

இதுவரை தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளாத பட்டதாரிகள்  தேசிய அடையாள அட்டை,  பட்டதாரி சான்றிதழ் பிரதி என்பவற்றுடன் வருகை தந்து 100 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X