2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ.வை பலப்படுத்த வேண்டும்

Kogilavani   / 2015 ஜனவரி 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி,யுதாஜித்

'அமைச்சுப் பதவிதான் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேவையாக இருந்திருந்தால் இதற்கு முன் இருந்த ஜனாதிபதியின் ஆட்சியிலேயே அதை பெற்றிருக்கும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

“100 நாட்களின் பின்னர், எதிர்வரும் ஏப்ரல் 23 திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பலப்படுத்த வேண்டும். அதுவே எங்களது எதிர்கால நகர்வுக்கு துணையாக இருக்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மகிழடித்தீவில் வெள்ளிக்கிழமை(16)  இடம்பெற்ற உறவுகளுடன் உறவாடுவோம் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

'அமைச்சுப் பதவி என்பது இப்போது வந்திருக்கின்ற மாற்றத்தின் மூலமாக 100நாள் வேலைத்திட்டத்திற்காக வழங்கப்பட்டதுதான். தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சுப்பதவியை எடுத்திருந்தால் 100 மீற்றருக்குரிய ஒரு கொங்கிறிட் வீதியை மட்டும்தான் அபிவிருத்தி செய்ய முடிந்திருக்குமே வேறொன்றும் செய்திருக்க முடியாது.

கடந்த 65 வருடங்களாக புரையோடிப்போய் இருக்கின்ற இந்த தமிழ் மக்களின் இன அழிப்புக்கு பிற்பாடு பல தியாகங்களை செய்து, இழந்திருக்கின்ற தியாகிகளின் தியாகத்தை நிலை நாட்டுவதற்காகத்தான் நாங்கள் அரசியல் பணி செய்து கொண்டிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ்மக்கள் பதவிகளுக்கோ சலுகைகளுக்கோ  சோரம்போகாமல் கடந்த தேர்தல்களை விட ஆர்வத்துடனும் ஆட்சிமாற்றத்திற்காகவும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து மகிந்த அரசை தோக்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றியிருக்கும் பெருமை தமிழர்களுக்கே அதிகம் உண்டு.

இந்த உண்மையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உணர்ந்து மனம் விட்டு கூறியிருக்கின்றார்.

நன்றிதெரிவிக்கும் பாரம்பரியம் தமிழ்மக்களால் பேணப்பட்டுவருகிறது. அதே நோக்கில் சிலர் அரசியலுக்காக நன்றிசெலுத்த வேண்டும் என்று கடந்த தேர்தலில் கூறியிருந்தனர். அரசியலுக்காக எவரும் நன்றிசெலுத்தத் தேவையில்லை“ என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X