2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

செங்கலடியில் முனைப்பு பாலர் பாடசாலை ஆரம்பிப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


கே.எல்.ரி.யுதாஜித்


முனைப்பு நிறுவனத்தினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் பாலர் பாடசாலை நேற்று சனிக்கிழமை(17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

செங்கலடி பாடசாலை கட்டடத்தில் இப்பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முனைப்பு, இலங்கைக் கிளையின் தலைவர் கு.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த முனைப்பின் பொருளாளரும் திட்டமிடல் பணிப்பாளருமான தி.பாலேந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி முனைப்பு பாலர் பாடசாலை எதிர்வரும் வருடங்களில் செங்கலடி மத்திய கல்லூரிக்கான முன்மாதிரி பாலர் பாடசாலையாக செயற்பட இருப்பதுடன், குறித்த பாலர் பாடசாலை நிர்வாகத்தை செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் தலைமையிலான நிர்வாக உத்தியேயாகத்தர்களே கண்காணிப்பார்கள் என்றும் பிரதேசத்தில் உள்ள ஏனைய சிறிய பாலர் பாடசாலைகளையும் ஒருங்கிணைத்து செயற்படுவதற்கு எண்ணியுள்ளதாகவும் பாடசாலை அதிபர் கூறினார்.
 
செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி என்.முகுந்தன், சுவிஸ் முனைப்பின் பொருளாளரும், திட்டமிடல் பணிப்பாளருமான தி.பாலேந்திரா, இலங்கை முனைப்பின் தலைவர் கு.அருணாச்சலம், செயலாளர் செ.நிலாந்தன், உப செயலாளர் திருமதி .ம.பாலகிருஸ்ணராஜா, பிரதேச செயலகத்தின் முன்பள்ளி உத்தியோகத்தர் சர்ஜின் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X