2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

த.ம.வி.பு. கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2015 ஜனவரி 18 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் மீது, சனிக்கிழமை செங்கலடி பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

எறாவூர் 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஏகாம்பரம் பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர், செங்கலடி செல்லம் தியேட்டருக்கு அண்மையில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாத சிலரினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி நபர், தற்போது சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பிலான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் முறையான விசாரணைகள் எதையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதுடன் தாக்குதல்களும் மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X