2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மூவருக்கெதிராக முறைப்பாடு

Gavitha   / 2015 ஜனவரி 18 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பொதுச் செயலாளர் கே.ஜெய்சங்கரினால், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உட்பட 3 பேருக்கு எதிராக, முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறைப்பாடு சனிக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தான் பொதுச் சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில், தான் இலஞ்சம் பெற்றதாக, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் ஆகிய மூவரும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு இலஞ்சம் பெற்றிருப்பின் அதனை நிரூபிக்குமாறும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை ஒன்றை எடுக்குமாறும் கோரியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததால் இதை நிரூபிக்குமாறும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை ஒன்றை எடுக்குமாறும் கோரியே அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்றும் தனக்கு நீதியை பெற்றுத்தருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X