2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலையிலிருந்து பொருட்கள் மீட்பு

Sudharshini   / 2015 ஜனவரி 19 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்
,ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை கடதாசி ஆலையின் விடுதிகளிலிருந்து, உலர் உணவுப் பொதிகளும் பாடசாலைப் பை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகளையும் ஞாயிற்றுக்கிழமை (18) மீட்டெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கடதாசி ஆலையின் நிறைவேற்று அதிகாரியாக இருந்த, தேசமான்ய மங்கள சி.செனரத் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் அதன் அருகிலிருந்த இரண்டு அறைகளிலிருந்தே பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அனைத்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கொண்டுவரப்பட்டவை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடதாசி ஆலையில் உலர் உணவுப் பொதிகள் இருப்பதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூஸைனின் பணிப்புரைக்கமைவாக, விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த விடுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (19) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற அதிகாரிகளின் உதவியுடன் பொருட்களை, நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X