2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 19 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பிலுள்ள இராணுவத்தின் 231ஆவது படைத்தலைமையகமும் 8ஆவது கெமுனு படைப்பிரிவும் இணைந்து, 231ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பாலித பெர்ணாண்டோவின் ஆலோசனைக்கமைய, 150 வறிய மாணவர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (18) பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

மங்களகம வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மங்களகம வித்தியாலயத்தினைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கும் உறுகாமம் அ.த.க. பாடசாலையைச் சேர்ந்த 50 முஸ்லிம் மாணவர்களுக்கும், பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதேவேளை, காலியைச் சேர்ந்த பிரிகேடியரின் பாலித பெர்ணாண்டோவின் நண்பரான றிப்தி பதுர்தீன் என்பவரின் அனுசரணையில், இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், 231ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பாலித பெர்ணாண்டோ, மங்களகம விகாரையின் விகாராதிபதி தெய்கம ஞானரத்ன தேரர், 8ஆவது கெமுனு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்ரினன் கேணல் சம்பத் ரத்நாயக்க, 231ஆவது பிரிக்கேட்டின் சிவில் இணைப்பதிகாரி மேஜர் அனுர துணுதிலக, மங்களகம வித்தியாலய அதிபர் ஏ.எம்.சுமணரத்ன, அனுசரணையாளரான றிப்தி பதுர்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X