2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிரமதானப் பணி

Gavitha   / 2015 ஜனவரி 19 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் இராணுவத்தினரால், திங்கட்கிழமை (19) சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண, 231ஆவது பாதுகாப்புக் கட்டளைத் தலைமை அலுவலக அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு 12ஆவது 'கஜபா' பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமை அதிகாரி தலைமையிலான இராணுவ அணியினர், அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து இச்சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, முதலைக் குட்டி ஒன்று பிடிக்கப்பட்டதுடன் முதலை முட்டை இடும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X