2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு தெரிவான நான்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Gavitha   / 2015 ஜனவரி 19 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் குடும்பத்தினரால் இப்புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவ பீட மாணவர்களுக்கு தலா 8,000 ரூபாவும் பொறியில் பீட மாணவர்களுக்கு தலா 7,000 ரூபாவும் குறிப்பிட்ட பயிற்சி நெறிகள் முடியும் வரை மாதாந்தம் வழங்கப்படவுள்ளன.

மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியிருப்பவர்களில் அனோஜா குணசேகரத்துக்கும் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியிருப்பவர்களில் பாலசுப்ரமணியம் சுரேந்தர், தர்சிகா லோகநாதன் மற்றும் யோகேஸ்வரன் சசிகாந் ஆகிய மாணவர்களுக்கே இவ்வாறு மாதாந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரனும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன், மட்டக்களப்பு மேற்கு வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ் மற்றும் லண்டன் சிவன்கோயில் பொருளாளர் எஸ்.சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு, ஈச்சிலம்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.லோகராஜா, மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவர் தேவசிங்கம், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று கடந்த வருடமும் மருத்துவ பீடத்துக்குத் தெரிவான 02 மாணவர்களுக்கும் பொறியியல் பீடத்துக்குத் தெரிவான 02 மாணவர்களுக்கும் பூகோளவியல், விஞ்ஞானத்துறை மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளுக்குத் தெரிவான தலா ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்புலமைப் பரிசில்கள் யாழ்ப்பாணம், வேலணையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X