2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஜனவரி 19 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்


தங்களது பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் கவனம் செலுத்தி, தீர்த்துத் தருமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்கள், திங்கட்கிழமை (19) பிற்பகல் கடதாசி ஆலைவளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தற்போதுள்ள பணிப்பாளர் சபையை அகற்றி, புதிய பணிப்பாளர் சபையை அமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தங்களது சம்பளத்தில் இருந்து மூன்று வருடங்களாக கழிக்கப்பட்டு வந்த ஊழியர் சேமலாப நிதி கொடுப்பனவு மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக் கொடுப்பனவு என்பவற்றை பெற்றுதந்து நிலுவையாகவுள்ள மூன்று மாத சம்பள பணத்தையும் பெற்றுத் தர வேண்டுமென கடதாசி ஆலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X