2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'ஹிஸ்புல்லாஹ் விசாரணைக்கு ஒத்துழைத்தால் ஊழல் மோசடிகள் நிரூபிக்கப்படும்'

Thipaan   / 2015 ஜனவரி 19 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் மோசடிகள் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அதனை நிரூபிக்க முடியுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான்,

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நாங்கள் உட்பட பொது எதிரணியில் நின்று உழைத்தவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார்.

நான் எனது ஆட்சிக்காலத்தில் ஏதாவது அதிகார துஷ்பிரயோகங்களை ஊழல் மோசடிகளை செய்திருந்தால் அதனை நீங்கள் நிரூபியுங்கள் எனவும் அப்படி செய்தது கிடையாது, இப்போது நான் அதிகாரத்திலில்லாமல் இருக்கின்றேன் என்றும்   ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளை விசாரிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றது. உடனடியாக இதனை செய்து நிரூபிக்க வேண்டும் எனவும் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் தருவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரது அரசியல் எப்படிப்பட்டது அரசியலில் அவர் நடந்து கொண்ட விதம் எப்படியானது என்பதனை அனைவருக்கும் நன்கு தெரியும்.

அப்படி இருக்கத்தக்கதாக நான் ஒரு துளியும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய வில்லை. சிறிதளவும் ஊழல் செய்யவில்லை என கூறுகின்றார்.
 
அதிகார துஸ்பிரயோகம் என்றால் என்ன? அரசியல் பழிவாங்கல் என்றால் என்ன? ஊழல் மோசடி என்றால் பொதுச் சொத்துக்களை சுரண்டுதல் என்றால் என்ன? என்பதை இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் மோசடிகள் குறித்த ஏராளமான குற்றச்சாட்டுக்களை, ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கும் ஏற்கெனவே நாங்கள் வழங்கியுள்ளோம்.
அதற்கு கடந்த சில வருடங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மூன்று விடயங்களை மாத்திரம் இதை நிரூபிப்பதற்காக கூறி வைக்க விரும்புகின்றோம்.

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்ற செலிங்கோ புறபிட் செயரிங் விடயத்தை நாங்கள் ஆதரமாக காட்டுவோம். அவர் ஒத்துழைத்தால் அதை விசாரணை செய்யும் போது அதற்கான ஆதாரங்களை முன் வைப்போம்.

குவைட் சிற்றி வீட்டுத்திட்ட விவகாரம் மற்றும் காத்தான்குடி நகர சபையில் அவரது அரசியல் அதிகாரத்தில்  நடந்திருக்கின்ற அரசியல் துஷ்பிரயோகங்கள் ஊழல் மோசடிகளை அவர் ஒத்துழைத்தால் நாங்கள் காட்ட முடியும் நிரூபிக்க முடியும் என தெரிவித்தார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X