2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளநீர் புகுந்த கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 20 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  

 
2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளநீர் உட்சென்ற கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை   மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் திங்கட்கிழமையிலிருந்து  (19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்டமாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள   குமாரவேளியார் கிராமத்திலும் பதுளை வீதியிலும் அமைந்துள்ள 20 கிணறுகள் இறைத்துச் சுத்தப்படுத்தப்பட்டன.

கோறளைப்பற்று தெற்கு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகங்களின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை கிணறுகளை சுத்திகரிக்கும் நடவடிக்கையை  முன்னெடுத்துள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்  மட்டக்களப்பு கிளைத் தலைவர் த.வசந்தராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்றிட்டத்தில்  நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சீ.கஜேந்திரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X