2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி ஊர் வீதியை அகலமாக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஊர் வீதியை அகலமாக்கும் பொருட்டு அவ்வீதியில் அமைக்கப்பட்டிருந்த  சட்டவிரோத கட்டடங்களை உடைக்கும் நடவடிக்கையை  காத்தான்குடி நகரசபை  திங்கட்கிழமையிலிருந்து  (19) முன்னெடுத்துள்ளது.  

2 கிலோமீற்றர்  நீளத்தைக் கொண்ட இந்த வீதியை அகலமாக்கி கார்ப்பட் இட்டு  புனரமைக்கவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வீதியில் அமைக்கப்பட்டிருந்த  வீடுகள்,  ஏனைய கட்டடங்கள், சுற்றுமதில்கள் உள்ளடங்கலாக 340 சட்டவிரோதக் கட்டடங்களை உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீதியை அகலமாக்குவதற்காக    சட்டவிரோத கட்டடங்களை உடைக்கவுள்ளதாக கூறி சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே  கட்டட  உரிமையாளர்களுக்கு காத்தான்குடி நகரசபை அறிவித்தல் கடிதங்களை அனுப்பியதாகவும் எஸ்.எச்.அஸ்பர் கூறினார்.

காத்தான்குடி ஊர் வீதியின் ஐந்தாம் குறிச்சிப்பகுதியில் சட்டவிரோதக் கட்டடங்கள் உடைக்கும் நடவடிக்கை நேற்றையதினம் (19) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையும் (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X