2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலையில் புதிய மாணவர்கள் அனுமதிப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 20 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்குரிய 2013 மற்றும் 2014ஆம் கல்வியாண்டு;க்கான புதிய மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் தாதிய மாணவர்கள் திங்கட்கிழமை(19) வரவேற்கப்பட்டனர்.

இதன்போது, மருத்துவ பீடத்தக்காக 66 மாணவர்களும் 15 தாதியர் மாணவர்களுமாக 81 புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்குரிய மட்டக்களப்பு வளாக மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

பல்கலையின், சுகாதார சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.ரி.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பலக்லைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, சர்வோதய இயக்கத்தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ன, கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X