2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மட்டக்களப்பு வாழ் வீரமுனை மக்கள் ஒன்றியம்' உருவாக்கம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 20 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்த 'மட்டக்களப்பு வாழ் வீரமுனை மக்கள் ஒன்றியம்' என்னும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் அங்குராhப்;பணக் கூட்டம் மட்டக்களப்பு, கூழாவடியில்  திங்கட்கிழமை (19) இரவு நடைபெற்றது.

வீரமுனைக் கிராமத்துடனான தொடர்பையும்; சமூக மற்றும் கல்வி சேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கிராமமாகவும் உள்ள வீரமுனை கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டுவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்

இந்த அமைப்பில்  11 பேர் கொண்ட நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.  நேற்றைய (19) கூட்டத்தில் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்  ஆராயப்பட்டன.

இந்த அமைப்பின் தலைவராக மு.விநாயகமூர்த்தியும் செயலாளராக ச.தெய்வேந்திரனும் பொருளாளராக ஜோ.செந்தில்நாதனும் கணக்காய்வாளராக எம்.கருணாகரனும் உபதலைவராக த.அழகையாவும் உபசெயலாளராக த.மணிவண்ணனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாகசபை உறுப்பினர்களாக எஸ்.சந்திரமோகன், கி.வரதராஜன், எஸ்.நவநீதகுமாரன், வா.ரமேஸ்குமார், எஸ்.வாமதேவன், எஸ்.ராஜ்குமார், மா.புத்திசிகாமணி, வை.கணேசமூர்த்தி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த அமைப்பின் தலைவர் மு.விநாயகமூர்த்தி இங்கு உரையாற்றும்போது,

'எதைச் செய்வது என்றாலும், ஒன்றிணைந்த ஓர் அமைப்பு தேவை. அனைவரையும் இணைத்து சேவையாற்ற இந்த அமைப்பு பெரும் உதவியாக இருக்கும். 1990ஆம் ஆண்டு வீரமுனையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பலர், இந்த மட்டக்களப்பு நகரில் வாழ்கின்றனர். அவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவேண்டும்.

1990ஆம் ஆண்டு வீரமுனையில் இடம்பெற்ற சம்பவங்களே எங்களை அங்கிருந்து வெளியேற்றின. அந்தச் சம்பவங்களை நாங்கள் நினைவுகூரவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். கிராமங்களுக்குள் இருப்பவர்களை விட, வெளியில் இருப்பவர்களுக்கு வெளி அனுபவம் அதிகம். அந்த அனுபவங்களை பயன்படுத்தி எமது மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X