2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வர்ண விருது விழா நடத்தப்படாமை கவலையளிக்கின்றது: துரைசிங்கம் மதன்

Sudharshini   / 2015 ஜனவரி 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் பதக்கம் பெற்ற வீர, வீராங்கனைகளுக்காக நடப்படும் வர்ண விருது விழா, கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படாமையானது மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. இதன் காரணமாக தேசிய போட்டிகளுக்கு செல்லும் வீரர்களின் தொகையும் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது என  மண்முனை வடக்கு முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண கபடி அணி தலைவருமான துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.


இது தொடர்பில் திங்கட்கிழமை (19) அவர் விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் நடைபெற்று வந்த வர்ண விருது வழங்கும் விழா, கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமலிருப்பது விளையாட்டு வீரர்கள் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வருடங்களில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கு காசோலைகளும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், வரும் பரிசுத் தொகையைக் கொண்டு, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்து, அடுத்தடுத்த போட்டிகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


அவர்கள் பற்பல தியாகங்களைச் செய்து கிழக்கு மாகாணத்துக்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்தநிலை தொடர்ந்தால் மாகாணத்துக்குரிய பதக்கங்களின் எண்ணிக்கை குறைவடைவதுடன் தேசிய அணிக்கு எமது மாகாணத்தின் வீரர்கள் தெரிவாகும் எண்ணிக்கை குறைவடையவும் சந்தர்ப்பம் உள்ளது.


எனவே, மாகாணத்தின் முதலமைச்சர், விளையாட்டு அமைச்சர், விளையாட்டு பணிப்பாளர், அதிகாரிகள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, விளையாட்டு வீரர்களின் மன உளைச்சலை நீக்கி, அவர்களுக்கு மன உறுதியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துமாறு விளையாட்டு வீரர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X