2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் மீட்பு

Sudharshini   / 2015 ஜனவரி 20 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவரது வீட்டிலிருந்து, முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் மற்றும் நீலப் படையணியின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் என்பவற்றை இன்று செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியிலுள்ள அமைப்பாளர் வீட்டில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த அமைப்பாளரின் வீட்டை சோதனையிட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது, குறித்த அமைப்பாளரின் வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் 52;, நீலப்படையணியின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் 520; என்பன மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இப்பொருட்களை  புதன்கிழமை (21) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X