2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணங்களை பதுக்கிவைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 21 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் பதுக்கிவைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவரை செவ்வாய்க்கிழமை (20) மாலை  கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சமீபத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்கள், முன்னாள் ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட தொப்பிகள் என்பவற்றை  பதுக்கிவைத்திருந்தார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்; கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன், அவரது வீட்டிலிருந்து நிவாரணப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X