2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி நகரசபையின் ஊழலை நிரூபிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையானது ஊழல் நடவடிக்கைகளை செய்திருந்தால், அதை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு    காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் வேண்டுகோள் விடுத்தார்.  

காத்தான்குடி நகரசபையில் செவ்வாய்க்கிழமை (20) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்; சந்திப்பிலேயே  அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,  

'தற்போது காத்தான்குடி நகரசபையிலுள்ள எதிர்க்கட்சியினரான எங்களுடன், நகரசபை உறுப்பினர்களாக இருக்கின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ச்சியாக காத்தான்குடி நகரசபையில் ஊழல், ஊழல் என்று கூறிவருகின்றார்கள்.

எந்த ஊழல் இருந்தாலும், நிரூபியுங்கள். எங்களை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் என்று இந்த நகரசபைக்கு வந்த காலத்திலிருந்து நாங்களும்  கூறிவருகின்றோம்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் றஹ்மான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி நகரசபையில் ஊழல் உள்ளது. அது தொடர்பான ஆதாரங்கள் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.  

புதிதாக வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிறைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. அந்த ஆணைக்குழுக்களிடமோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமோ உடனடியாக சென்று, காத்தான்குடி நகரசபையில் இடம்பெற்றுள்ளதாக நீங்கள் குறிப்பிடும் ஊழல் தொடர்பில்;   முறைப்பாடு செய்து அதற்கான ஆதாரங்களை  ஒப்படைத்து நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு ஊழல் செய்திருந்தால், நாங்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.  நாங்கள் ஊழல் செய்திருந்தால்,  அதற்காக எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தண்டனையை  பெற்றுத்தாருங்கள்.  அவ்வாறு இல்லையேல், எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X