2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

டெங்கொழிப்பு செயற்றிட்டத்தின் கீழ் விழிப்புணர்வுப் பேரணியும் வீடுகளில் டெங்குப் பரிசோதனையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 6ஆம் குறிச்சி 162பி கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் புதன்கிழமை  (21) முன்னெடுக்கப்பட்டன.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி கிராம அபிவிருத்திச்சங்கம், சிவில் பாதுகாப்புக்குழு, சமுர்த்திச் சங்கங்கள் இணைந்து காத்தான்குடி சுகாதார அலுவலகம், காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்பவற்றின் அனுசரணையுடன் மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இதன்போது, 300 வீடுகளில்  டெங்குப் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, பதுறிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக விழிப்புணர்வு பேரணி ஆரம்பமாகியது.

காத்தான்குடி நகரசபை பிரிவில் இந்த  வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து  20ஆம் திகதிவரை 25 பேருக்கு டெங்கு நோய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி எல்லைப்பகுதியிலேயே அதிகமானோருக்கு டெங்கு நோய்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன்,  காத்தான்குடி நகரசபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X