Suganthini Ratnam / 2015 ஜனவரி 21 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அண்மையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான தேத்தாத்தீவு கிராமத்திலுள்ள 370 குடும்பங்களுக்கு சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலருணவுகள் புதன்கிழமை (21) வழங்கிவைக்கப்பட்டன.
தேத்தாத்தீவு வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் களுவாஞ்சிக்குடி உதவிப் பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய களுவாஞ்சிக்குடி உதவிப் பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணீதரன்,
'இப்பொழுது நாம் நிவாரணத்துக்காக பழக்கப்பட்டுவிட்டோம். அரசாங்க நிவாரணத்தையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் எல்லாத் தேவைகளுக்;கும் நம்பியிருக்கின்ற கலாசாரம் உருவாகிவிட்டது. நிவாரணங்களுக்காக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் சூழ்நிலைகளுக்கும் மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இந்த மாறுபாடான கலாசாரத்திலிருந்து மக்கள் விடுபடவேண்டும்.
இயற்கை இடர் ஏற்படுகின்ற மாரி காலத்தில் உணவுகளை சேமித்து வைக்கவேண்டும். அத்தியாவசியாமான கையிருப்புகள் இருக்கவேண்டும். பணமும் சேமிப்பில் இருக்கவேண்டும். பாதுகாப்பாக எமது இடங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் தருகின்ற உதவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி அதனூடாக மக்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும்' என்றார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025