Suganthini Ratnam / 2015 ஜனவரி 21 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் செவ்வாய்க்கிழமை (20) விடுத்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
'தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தமது இரண்டு உறுப்பினர்களுடன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையானது அவர்களின் அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
முஸ்லிம் முதலமைச்சர் வருவதை விடுத்து தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைத்து அவர்கள் இந்த அறிக்கையை வெளியிடவில்லை. இன்றைய சிக்கல் நிலையை மேலும் சிக்கல் நிலைக்கு கொண்டுசெல்லும் வகையிலேயே இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், அந்த இரண்டு உறுப்பினர்களின் இரண்டு பேரின் ஆதரவை மட்டும் கொண்டு ஆட்சி அமைக்கமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கும் அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன' எனக் கூறினார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025