2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சிறுவர்களின் எதிர்பார்ப்புகள் வளர்ந்தவர்களால் நசுக்கப்படுகின்றன'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 22 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர்களின் ஆதங்கங்களும் எதிர்பார்ப்புகளும் வளர்ந்த மனிதர்களினால் நசுக்கப்படுகின்றன என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி பரிசளிப்பு விழா, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வியாழக்கிழமை (22)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற குழந்தைகள், சிறுவர்களின்  எதிர்பார்ப்புக்கள்,  விளையாட்டுக்கள், ஆதங்கங்கள் போன்றவை வளர்ந்த மனிதர்களினால் நசுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு உருக்குலைக்கப்படுகின்றன.

இன்று பல இடங்களில் நடந்துகொண்டிருக்கின்ற பல சம்பவங்கள் சிறுவர்கள் மீதான  துன்புறுத்தல்கள், வதைகளாகவே உள்ளன. போதைவஸ்து கடத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

சிறுவர்களின் ஏக்கம், ஆதங்கங்கள் இதற்கெல்லாம் வளர்ந்தவர்களே காரணம்.

எங்களுடைய செயற்பாட்டை திருப்பிப் பார்க்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும். அனைத்து பேதங்களையும் மறந்து மக்களுக்காக சேவையாற்ற அனைவரும் முன்வரவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X