2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளம் காரணமாக 76,000 ஹெக்ரேயர் விவசாயச்செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 22 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76 ஆயிரம் ஹெக்ரேயர் விவசாயச்செய்கை பாதிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35,851 ஹெக்ரேயர், அம்பாறை மாவட்டத்தில் 17,125 ஹெக்ரேயர், திருகோணமலை மாவட்டத்தில் 23,085 ஹெக்ரேயர்   விவசாயச்செய்கை பாதிக்கப்பட்டதாகவும் விவசாயத்  திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, இந்த  மாகாணத்தில் சுமார் நான்காயிரத்து எழுநூறு ஹெக்ரேயரில் பயிரிடப்பட்ட உப உணவுச் செய்கையும் பாதிக்கப்பட்டது.   

மட்டக்களப்பில்  1,730 ஹெக்ரேயர், அம்பாறையில் 1,718 ஹெக்ரேயர், திருகோணமலையில் 1,319 ஹெக்ரேயர் உப உணவுச் செய்கையும் பாதிக்கப்பட்டதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X