2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சேவையாற்றவே அரசியலுக்கு வந்தோம்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 22 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அரசியலை பயன்படுத்தி பணம் உழைக்கவேண்டும் என்ற நோக்கம் தங்களுக்கு இல்லை. தாங்கள்; இந்த அரசியலுக்குள் வந்தது மக்களுக்கு பாதுகாப்பளிக்கவும்  சேவையாற்றவும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்;ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட மாங்காட்டில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில்  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தமிழ் மக்கள் இந்த நாட்டில் நல்ல தலைவர் ஒருவரை தேர்தெடுக்கமுடியாத நிலையிலிருந்தார்கள்.  ஆனால், இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தது.

1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச்; மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இந்த மாவட்டத்துக்கு  பல சேவைகளை செய்துள்ளனர். அதேபோன்ற சந்தர்ப்பத்தை  இம்முறையும் மக்கள்; எங்களுக்கு  தரவேண்டும்

நாங்கள் இப்போதுதான் பிறந்த குழந்தைகள். 20 வருடங்களுக்கு பின்னர் எங்களுக்கு ஆட்சி கிடைத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் வரும் தேர்தலில் பெறும் வாக்குகளே எமது முழுமையான வெற்றியை உறுதிப்படுத்தும்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். உங்களுக்கு வேண்டிய சேவைகளை நாங்கள் நிச்சயமாக செய்வோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X