Suganthini Ratnam / 2015 ஜனவரி 23 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடிப் பகுதியிலுள்ள மீராகேணி நீரோடையில் நீராடிக்கொண்டிருந்தபோது, மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர் மிச் நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கற்கும் ஆப்தீன் ஸாஹிர் (வயது 10), மீராஷாஹிப் மிஹ்னாஸ் (வயது 10) ஆகியோரே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் ஆப்தீன் ஸாஹிர் என்பவர் கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஆகக்கூடிய 186 புள்ளிகளை பெற்றவர் ஆவார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025