Suganthini Ratnam / 2015 ஜனவரி 23 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், உலக வங்கியின் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியில் ஜிஓ ருவரிசம் எனப்படும் திட்டம் நஷனல் ஜோக்கிரபியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதில் நஷனல் ஜோக்கிரபியின் சுற்றுலாத்துறைக்கான பணிப்பாளர் ஜிம் டியோன் இத்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
இத்திட்டத்தில் சுற்றுலாத்துறை வளங்கள், இடங்கள், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள், மக்கள், கலாசாரம், பண்பாடு, உணவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய இணையத்தளமும் செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த ஈஸ்ரன் சிறிலங்கா எனப்படும் இணையத்தளத்தை நஷனல் ஜோக்கிரபி செயற்படுத்தவுள்ளது.
தற்போது மக்கள், சமூகத்தவர்கள், வரலாற்று, சமூக விடயங்களில் அக்கறையுள்ளவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் சுற்றுலா மற்றும் கலாசார பண்பாட்டு விடயங்களை பதிவுசெய்யும் வகையிலான வழி இந்த இணையத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் யாரும் தங்களது பிரதேசங்களில் அறிந்த சுற்றுலா சார்ந்த விடயங்களை பதிவுசெய்துகொள்ள முடியும்.
இதற்கு பிரதேச மக்களது தகவல்களே இந்த இணையத்தளத்தினை முழுமைப்படுத்துவதாக இருக்கும். எனவே அனைத்து தரப்பினரும் சுற்றுலாத்துறை தொடர்பான, வரலாற்றுத்தளங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கலாம் என்றும் நசனல் ஜோக்கிரபியின் சுற்றுலாத்துறைக்கான பணிப்பாளர் ஜிம் டியோன் தெரிவித்தார்.
ஆர்வமுள்ளவர்கள் http://www.easternsrilanka.com என்ற இணையத்தளத்தினுள் நுழைந்து தங்களிடமுள்ள தகவல்களைப் பதிவு செய்து சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கலாம். இம்மாதம் முதல் எதிர்வரும் 2015ஆம் வருடத்தின் ஜூன் மாதம் வரையில் இவ்வாறான பதிவுகள் நடைபெற்று முழுமையடைந்த பின்னர் இந்த இணையத்தளம் சுற்றுலாத்துறைப் பாவனைக்கானதாகத் திறந்துவிடப்படும்.
இத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடனும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களினதும் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
http://www.easternsrilanka.com/participate.php என்ற தொடுப்பின் ஊடாக இந்த இணையத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் தகவல்களை அனுப்பி வைக்க முடியும்.வழங்கப்படும் தகவல்கள் துறைசர்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டு சரி பார்க்கப்பட்டு பின்னர் இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளப்படும். அத்துடன், இதில் பங்களிப்புச் செய்பவர்களுக்கு நஷனல் ஜோக்கிரபியின் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago