Suganthini Ratnam / 2015 ஜனவரி 23 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு வாவியின் எல்லையிடலும் மற்றும் நீடித்து நிலைக்கத்தக்க முகாமைத்துவத்துக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (23) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரிய கல்லாறு முதல் ஏறாவூர் வரையான 320 கிலோமீற்றர் வரையான வாவியை 33 மில்லியன் ரூபாய் செலவில் 25 மீற்றர் இடைவெளியில் 16,000 கம்பிக் கட்டைகளை இட்டு பராமரிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள இணைப்பாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.
இதில் 8 கரையோர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 70 கிராம சேவகர் பிரிவுகள் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், வன அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் பங்குபற்றினர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago