Kogilavani / 2015 ஜனவரி 23 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
கிழக்கினிலே போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உற்பத்தி செய்யும் கைப்பணிப் பொருட்களை உல்லாசப் பிரயாணிகளுக்கு சந்தைப்படுத்துவதற்கான இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் உல்லாசப் பிரையாணிகள் திட்டப் பணிப்பாளர் ஜிம் டியோன் தெரிவித்தார்.
கிழக்கிலங்கையின் புவியியல் சம்பந்தமான உல்லாசப் பிரயாணிகள் இணைய தளமான றறற.நயளவநசளெசடையமெய.உழஅ மற்றும் தேசிய புவியியல் சஞ்சிகை பற்றிய அறிமுகப்படுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு நிலையத்தில் நடைபெற்றது.
சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் கூறுகையில்,
உல்லாசப் பிரயாணிகளை அதிகம் கவரும் இடமாக கிழக்கு மாகாணம் மாற்றம் பெற்று வருகின்ற நிலையில் உல்லாசப் பிரயாணிகளுக்கான தங்குமிடம், உணவுகள், பொழுது போக்குகள், சுகாதார வசதிகள் உட்பட அன்றாட தேவைகளை பாதுகாப்பாகவும் மற்றும் இலகுபடுத்தும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களை குறித்த இணைய தளத்தில் தரவேற்றம் செய்வதனால் சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் தரவேற்றம் செய்யும் முறை பற்றியும் விளக்கமளித்தார்.
குறித்த தளத்தைப் பற்றியும், தேசிய புவியியல் சஞ்சிகை பற்றியும் உல்லாசப் பிரயாணிகளுக்கு அறிமுகம் செய்வதற்கான முறைகள், குறித்த தளத்தில் அங்கத்துவம பெறல், அணுகும் முறை, தரவேற்றம் செய்தல் போன்ற விடையங்கள் பற்ற கலந்துகொண்டோருக்கு தெளிவுபடுத்தினார்.
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகள், உல்லாசப் பிரயாணிகளுக்கு இடங்களைப் பற்றி விளக்கமளித்து வழிகாட்டுவோர் இதில் கலந்துகொண்டனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025