Sudharshini / 2015 ஜனவரி 24 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 58 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதத்தில் 16 பேரும் டிசெம்பர் மாதம் 22 பேரும் ஜனவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 பேரும் மட்டக்களப்பில் இனம்காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டில் தற்பொழுது டெங்கு நோய் தாக்கமானது அதிகரித்துவிட்டது. இதற்கு பிரதான காரணம் வீடுகளிலுள்ள கிணறுகள், பொதுகிணறுகள் மற்றும் நீர்த்தேங்கி இருக்க கூடிய இடங்கள் சரியாக பேணப்படாமையாகும்.
எனவே, டெங்கு பரவகூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்.
மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த எமது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025