2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வாதார செலவை ஈடுசெய்யும் நோக்குடன் மீன்பிடியில் ஈடுபடும் பெண்கள்

Sudharshini   / 2015 ஜனவரி 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில், தலைமை தாங்கும் பெண்களும் அவர்களது பிள்ளைகளும் தங்களது வாழ்வாதாரச் செலவை ஈடுசெய்வதற்காக வெல்லாவெளி அருகிலுள்ள சிறு குளங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.


இதன்போது, ஆறு மற்றும் குளங்களிலிருந்து விரால், கோல்டன் மற்றும் செங்கணையான் போன்ற மீன்களையே தாங்கள் பிடித்து விற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


விரால் மற்றும் செங்கணையான் போன்ற மீன்களை 300 ரூபாவுக்கும் கோல்டன்;; கிலோ 200 ரூபாவுக்கும் விற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும், தங்களின் அன்றாட உணவுக்குரிய மீனைப் பெற்றக்கொள்வதோடு மட்டுமல்லாது ஒரு நாளைக்கு ரூபாய் 500 முதல் 800 வரை உழைப்பதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X