2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

Administrator   / 2015 ஜனவரி 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் விதவைகள் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் பொதுசன  உதவி தொகை  மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான சுயதொழில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்வி.தவராசா தலைமையில் இந்நிகழ்வு, பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட விதவைகள், அங்கவீனமுற்றவர்களுகு;கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலத்தின்  ஊடாக,  சமூக சேவை திணைக்களத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் பொதுசன  உதவி தொகை மற்றும்  மாதம் 5000 ரூபாவுக்கும் குறைந்த வருமானத்தை பெரும் குடும்பங்களிலுள்ளவர்களுக்கும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.


இதன்போது, தெரிவு செய்யப்பட 21 பேருக்கான கொடுப்பனவுகள்   வழங்கிவைக்கப்பட்டதுடன் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இவர்கள் பெற்றுக்கொண்ட மானிய தொகையின் ஊடாக, எவ்வாறான சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக பரிசீலனை செய்து, இவர்களுக்கு தேவையான உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் வி.தவராசா தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X