2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி வங்கியை பயனாளிகள் நன்கு பயன்படுத்தவேண்டும்: இசட் பஹ்மி

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமுர்த்தி வங்கியை சமுர்த்திப் பயனாளிகள் நன்கு பயன்படுத்தவேண்டும் என்று  திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளரும் காத்தான்குடி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமையாளருமான ஏ.எல்.இசட் பஹ்மி தெரிவித்தார்.

காத்தான்குடி பிரசே செயலகப் பிரிவிலுள்ள காத்தான்குடி ஏ வலய சமுர்த்தி வங்கிச் சங்கத்துக்கு இந்த ஆண்டுக்கான நிர்வாகிகளை தெரிவுசெய்யும் கூட்டம் சமுர்த்தி வங்கிச்சங்க கட்டடத்தில் சனிக்கிழமை (24) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, 15 பேர் கொண்ட வங்கிச்சங்க நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'இன்று சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் மூலம் பல்வேறு பயனை சமுர்த்தி பயனாளிகள் அடைந்து வருகின்றனர். இதன் மூலம் பல தொழில் வாய்ப்புகளுக்கான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. வாழ்வதாரத்தை முன்னேற்றுவதிலும் சமுர்த்தி வங்கிகள் செயலாற்றுகின்றன.

மிக இலகுவாக இந்த சமுர்த்தி வங்கியில் கடன்களை பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களின்  வருமானத்தை அதிகரிக்கச் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஊட்டவே இவ்வாறான சமுர்த்தி வங்கிகள் செயற்பட்டு வருகின்றன.
இவற்றை பயனாளிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X