Suganthini Ratnam / 2015 ஜனவரி 25 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கட்சி விட்டு, கட்சி மாறி அரசியல் செய்யும் நோக்கம் தனக்கு இல்லை என்று கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (24) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்துகொண்டு எனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கட்சி விட்டு, கட்சி மாறி அரசியல் செய்யமாட்டேன். அவ்வாறான அரசியல் கலாசாரம் எனக்கு தேவை இல்லை. சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
அத்துடன், பிரதிபலனை எதிர்பார்த்து மக்களுக்கு உதவி செய்யக்கூடாது. மக்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்கி, அவர்களிடமிருந்து அரசியல் ஆதரவு கோருவது நாகரிகம் அல்ல. அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குகளுக்காக உதவிசெய்வது, அவர்ளை திருப்திப்படுத்த முனைவது சிறந்த அரசியல் கலாசாரம் அல்ல.
கடந்த ஆட்சியில் சுமார் 60 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் மோசடிகள், சுரண்டல்கள், அதிகார துஷ்;பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்த பாரிய துரோகம் ஆகும். நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி தொடர்பில் மிக விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஊழல் விசாரணைகளில் தாங்களும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம் காரணமாக முன்னால் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
ஊழல் செய்திருந்தால், ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வாருங்கள் என்று இந்தப் பிரசேத்திலுள்ள முன்னால் பிரதி அமைச்சர் தெரிவித்திருந்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
ஊழலை வெளிக்கொண்டு வருவது பெரிய விடயமல்ல. அவ்வாறு ஊழலை வெளிக்கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் ஊர் மட்டத்தில், மாவட்ட மட்டத்திலும் தலைவர்கள், பல அரச அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் பல அசௌகரியங்களுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படும் என்று நினைக்கின்றேன்' என்றார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago