Gavitha / 2015 ஜனவரி 25 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்
வவுணதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட புளியடிமடுப் பாலம், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்து, இதுவரை திருத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாலத்துக்கு கருங்கற்களினால் அத்திவாரம் இட்டுள்ளமையால், சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக பாலத்தின் உறுதித்தன்மையும் குறைவடைந்துள்ளது.
சேதமடைந்துள்ள இந்த பாலத்தில், தற்போது இரண்டு சக்கர வாகனங்கள் தவிர வேறெந்த வாகனத்துக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பாதையை பயன்படுத்திய மக்கள், வவுணதீவை சுற்றியே பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாலத்தை கடந்தே பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்களுக்குக்கான விவசாய பொருட்களை, விவசாயிகள் கொண்டு செல்வது வழக்கம். தற்போது அந்த பாலமும் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளின் நிலங்களுக்கான பசளையை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இப்பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாக திருத்துவதாயின், பாலத்தின் உறுதித் தன்மை குறித்து பரிசீலனை செய்த பின்னர் பாலததே;துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்டாத வகையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சேதமடைந்துள்ள இப்பாலம் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமைக்கு காரணம் என்ன என்று மண்முனை மேற்குப்பிரதேச சபையின் செயலாளர் ஜே.விஜயகுமாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
மண்முனை மேற்குப்பிரதேச சபைக்குட்பட்ட இந்த பாலத்தை பாலத்தை அமைப்பதற்கு பல மில்லியன் பணம் தேவைப்படுவதால், உடனடியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கமுடியாது உள்ளது. விரைவில் பதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போதைக்கு சிறிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அளவுக்கு பாலத்தை திருத்துவதற்கான நடவடிக்கை அடுத்த வாரமளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago