2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவன ஈர்ப்பு போராட்டம்

Sudharshini   / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தெரிவித்தார்.


புதிய ஜனாதிபதியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு  கோரிக்கைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே தாம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில், நாளை காலை 10.00 மணியளவில் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சகல வேலையற்ற பட்டதாரிகளையும் இணைந்துகொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஏற்கனவே வழங்கப்பட்ட அரச நியமனங்களில் உள்வாங்கப்படாத 100க்கும் அதிகமானவர்களுடன் புதிதாக பட்டப்படிப்புக்களை நிறைவு செய்து கொண்டவர்களுமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 பேருக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X