2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 26 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காவத்தமுனை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது,  சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி  உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காவத்தமுனை மில்லத் வித்தியாலய வீதியைச் சேர்ந்த பதுர்தீன் இஸ்ஹாக் (வயது  16) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்

தனது  நண்பர்களுடன் காவத்தமுனை ஆற்றங்கரையோரத்தில்; ஞாயிற்றுக்கிழமை (25) மாலை  விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன்,  நீராடுவதற்காக ஆற்றில் இறங்கி நீராடியபோதே இந்த அசம்பாவிதத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X