2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'த.தே.கூ வை பகைத்து கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்யமுடியாது'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 26 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்யமுடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்தியகுழுக் கூட்டம், மத்திய குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை  நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய  அவர்,

'கிழக்கு மாகாணசபைக்கான  முதலமைச்சர் மற்றும் அதன் ஆட்சி விவகாரம்  அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகின்றன. கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மற்றும் முதலமைச்சர் விவகாரம் தொடர்பாக மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்றுள்ளன. சுமுகமான முறையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளபோதிலும், இதற்கான தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை.

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியானது,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த இரண்டரை வருடங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரியதாகும்.

முதலமைச்சர் பதவியை இன்னுமொரு கட்சிக்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக்கொடுக்க ஆயத்தமில்லை. இல்லையேல்,  கிழக்கு மாகாணசபையை கலைக்கட்டும் என்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேனவுடன் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பிந்தி வந்துசேர்ந்ததாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சிலர் விமர்சிக்கின்றனர்;.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிந்தி வந்து இணைந்திருந்தாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உடைக்காமல் சேதமில்லாமல் கட்சியிலுள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டே தலைவர், அமைச்சர் ரவூப்; ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டார்.  

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பல கட்சிகளினுள்  உடைவு காணப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற  கட்சிகளினுள் உடைவு ஏற்பட்டது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுள் உடைவு ஏற்படவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்,  அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சாணாக்கியமும் அவரின் அரசியல் முதிர்ச்சியும் கட்சியிலுள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X