Suganthini Ratnam / 2015 ஜனவரி 26 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சிப்பதை கண்டித்து அப்பாடசாலை நுழைவாயிலில் பழைய மாணவர்களும் பெற்றோரும் திங்கட்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி பாடசாலையில் தற்போது அதிபராக அருட்தந்தை ரஜீவன் இருதயராஜ் உள்ளார். இவரை மாற்றி மேற்படி பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க முயற்சிப்பதாகவும் இதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை ஊக்கப்படுத்திச் செல்வதற்கு பாடசாலையின் வளர்ச்சியில் ஆரம்பக்காலமிருந்து பணியாற்றிவரும் அருட்தந்தை ரஜீவன் இருதயராஜே பொருத்தமானவர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பாடசாலையை ஆரம்பம் முதல் கிறிஸ்தவ பாதிரியார்கள் நடத்திவந்த நிலையில் அரசுக்கு பாரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago