Suganthini Ratnam / 2015 ஜனவரி 26 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணம் தொடர்பில் நான்கு விடயங்களை முன்னிறுத்தி அவற்றை உடனடியாக கவனத்திற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஊடகங்களுக்கு திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'13ஆவது அரசியல் திருத்தச்சட்டமூலத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்; அமுல்படுத்தவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தூர்ந்துபோன தொழிற்சாலைகளை மீளக் கட்டியமைத்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டு, கிழக்கு மாகாணத்தில் காணி அற்றிருப்போருக்கு அவற்றை பகிர்ந்தளிப்பதுடன், ஏனைய காணிகளை கிழக்கு மாகாண மக்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தவேண்டும்.
கடந்த அரசாங்க காலத்தின்போது, ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அவ்வப் பிரதேச அரசியல்வாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட காரியாலயங்களை உடனடியாக அகற்றவேண்டும். இவ்வாறு காரியாலயத்தை திறந்து குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் அவர்களால் நியமிக்கப்பட்ட நபர்களும் கடமையாற்றியதால், பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அதிகாரிகளும் அங்கு அலுவல்கள் நிமித்தம் வரும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதிருக்கவும் பிரதேச செயலகத்திலுள்ள அரசியல்வாதிகளின் காரியாலயத்தில் பாவிக்கப்பட்ட தளபாடங்களை உடனடியாக பிரதேச செயலகங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஆகியவை தொடர்பிலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் ஜனாதிபதி உடனடிக் கவனத்தில் எடுப்பதாக தெரிவித்தார்' எனக் கூறினார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago