2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஜனவரி 26 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (26) காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்னாள் நடைபெற்றது.


இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.


புதிய ஜனாதிபதியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு  கோரிக்கைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆகியோரின் புகைப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிந்த பதாதைகளில் காணப்பட்டன.
2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு, தென்கிழக்கு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சகல பல்கலை கழகங்களிலிருந்தும் பட்டதாரிகளாக வெளியேறியவர்களே இவ்வார்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதி, பிரதமர், உயர்கல்வி அமைச்சர் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கான மகஜர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் பொன்.செல்வராசா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X