2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிக்குடி கொள்ளை; மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 26 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை  ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்ததுடன், கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றியதாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18.1.2015 அன்று களுவாஞ்சிக்குடியிலுள்ள இரண்டு வீடுகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஷ்;ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையுடன் களுவாஞ்சிக்குடி பிதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த கருணாரத்தினவின் வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனத் நந்தவல தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு ஐ போன்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகள், நான்கரை பவுன் தங்கநகைகள்,  கமரா, ஒரு இலட்சம் ரூபாய் பணம் போன்றவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X